பேட்மிண்டன் வீரருடன் நடிகை டாப்ஸி காதலா ?
டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஒருவருடன் நடிகை டாப்ஸி டேட்டிங் சென்றாதாக வரும் தகவலை அடுத்து கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை டாப்ஸி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை டாப்ஸி டுவிட்டர் மூலம் நண்பராக மாறிய பிரபல டென்மார்க் பேட்மிண்டன் வீரருடன் சமீபத்தில் டேட்டிங் சென்றதாக கூறப்பட்டது.
சமீபத்தில் நடந்த பேட்மிண்டன் போட்டி ஒன்றை நேரில் காண சென்ற டாப்ஸி Mathias Boe உடன் நெருக்கமாகி பின்னர் இருவரும் நண்பர்களாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது. இருவரும் கடந்த ஆறுமாத காலமாக டுவிட்டரில் நட்பாக பழகிவந்துள்ளனர்.
தற்போது நேரிலும் சந்தித்து தங்களது நட்பை வளர்த்துகொண்டிருக்கின்றனர். இந்த நட்பு தொடர்ந்து காதலாகி, பின்னர் திருமணம் வரை செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து கருத்து சொல்லவிரும்பவில்லை என்றும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை சம்மந்தமாக வெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
டென்மார்க் நாட்டை சேர்ந்த Mathias Boe, 33 வயது ஆனவர். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் இரட்டையர் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். மேலும் 2013ஆம் ஆண்டிலும் பல விருதுகளை பெற்றுள்ளார். தற்போது உலக அளவில் 6வது ரேங்கில் இருக்கும் Mathias Boe, இன்னும் திருமணம் ஆகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை