சிவகார்த்திகேயனுடன் அமலாபால்!
சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மான் கராத்தே’ படத்திற்கு பிறகு ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறாராம். ஹன்சிகாவுடன் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், மீண்டும் முன்னணி நடிகையான அமலாபாலுடன் ஜோடி சேர்ந்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இப்படம் முழுக்க முழுக்க ஆக்சனை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் வருகிறாராம். இப்படத்தில் நடைபெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக குங்பூ தற்காப்பு கலையை கற்றுக் கொள்ள இருக்கிறாராம். வில்லன் ஒரு குங்பூ வீரன் என்பதால் அவருடன் சண்டை போடுவதற்காக இந்த பயிற்சியை பெறுகிறாராம்.
இந்த படத்தையும் நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். படத்திற்கு அனேகமாக ‘எதிர்நீச்சல்-2’ என பெயர் வைப்பார்கள் என தெரிகிறது.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை