தெலுங்கில் முஸ்லீம் இளவரசியான அனுஷ்கா!
அனுஷ்கா தற்போது தெலுங்கில் ‘ருத்ரம்மாதேவி’, ‘பாகுபாலி’ ஆகிய சரித்திர படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்காக கடுமையான வாள் பயிற்சியும், பழங்கால சண்டை பயிற்சிகளும் கற்றுக் கொண்டு வருடக்கணக்கில் நடித்து வருகிறார்.
சரித்திர படங்களுக்கு அனுஷ்கா கனகச்சிதமாக பொருந்துவதால் மேலும் சில தெலுங்கு பட இயக்குனர்கள் இவருக்காக சரித்திர கதைகளை தயார் செய்துகொண்டு அனுஷ்காவை நடிக்கவைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு பல கதைகளை கேட்ட அனுஷ்கா, தற்போது ராஜமௌலி இயக்கும் ‘பாகுபாலி’ படத்தில் நடித்து முடித்தபிறகு 16-ஆம் நூற்றாண்டு கதை ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம்.
கோல்கோண்டா என்ற ராஜ்யத்தை ஆண்டுவந்த முகம்மது ஹூலி ஹூதுப் ஷா என்ற முஸ்லீன் மன்னனின் மனைவியைப் பற்றிய கதையில் அனுஷ்கா நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கு ‘பாஹ்மதி’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். இதில் முஸ்லீம் இளவரசியாக அனுஷ்கா நடிக்கிறார்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை