சர்வதேச திரைப்பட விழா ஆமீர்கான் துவக்கி வைக்கிறார்
11-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. இதை இந்தி நடிகர் ஆமீர்கான் துவக்கி வைக்கிறார். சிறப்பு அழைப்பாளராக கமலஹாசன் கலந்து கொள்கிறார்.19-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில், 58 நாடுகளைச் சேர்ந்த 163 படங்கள் திரையிடப்படுகிறது. உட்லண்ட்ஸ், ஐநாக்ஸ், அபிராமி, கேசினோ, ராணி சீதை ஹால் ஆகியவற்றில் தினமும் 4 காட்சிகளாக படங்கள் திரையிடப்படுகிறது.
விழாவுக்கு செர்பியா, ஈரான், துருக்கி, போலந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்பட கலைஞர்கள் வருகிறார்கள்.தமிழ் திரைப்பட போட்டி பிரிவில், ஆதலால் காதல் செய்வீர், 6 மெழுகுவர்த்திகள், அன்னக்கொடி, ஹரிதாஸ், கும்கி, மரியான், மூடர்கூடம், மூன்று பேர் மூன்று காதல், பரதேசி, பொன்மாலைப்பொழுது, சூதுகவ்வும், தங்க மீன்கள் ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது.
அமிதாப்பச்சன் இளம் சாதனையாளர் விருது இசை அமைப்பாளர் அனிருத்துக்கு வழங்கப்படுகிறது. தொடக்க விழாவில் ஷோபனா, சொர்ணமால்யாவின் நடன நிகழ்ச்சிகள் நடக்கிறது. மோகன்லால், நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார்.இதற்கான ஏற்பாடுகளை இந்தோ சினி அப்ரிசியேஷன் தலைவர் கண்ணன், செயலாளர் ராதாகிருஷ்ணன், விழாக்குழு தலைவர் தங்கராஜ், சுஹாசினி செய்து வருகிறார்கள்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை