இலவசமாக பாடிக்கொடுத்த நாக்குமுக்க புகழ் சின்னப்பொண்ணு
நகுல்-சுனைனா நடித்த படம் காதலில் விழுந்தேன். இந்த படம் ஓடியதற்கு முக்கிய காரணமே அந்த படத்தில் இடம்பெற்ற நாக்குமுக்க என்ற பாடல்தான்.
அந்த அளவுக்கு பட்டிதொட்டியெல்லாம் கலக்கோ கலக்கென்று கலக்கியது. குறிப்பாக விஜய் ஆண்டனியின் இசையில் அந்த பாடலை பாடிய சின்னப்பொண்ணின் வித்தியாசமான குரலும் அதற்கு காரணமாக அமைந்தது. அந்த அளவுக்கு துள்ளலாகவும், அதிரடியாகவும் அப்பாடலை பாடி இளவட்ட ரசிகர்களை தன்னை மறந்து ஆட வைத்தார் சின்னப்பொண்ணு.
அதையடுத்து ஏராளமான படங்களில் பாடத்தொடங்கிய சின்னப்பொண்ணு, சில படங்களில் வித்தியாசான கேரக்டர்களில் நடித்தும் வருகிறார்.
அந்த வகையில் வித்யாசாகர், ஏ.ஆர்.ரகுமான் உள்பட தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிவரும் அவர் தற்போது தமிழில் ஒரு நிலையான பாடகியாகி விட்டார்.
இந்நிலையில், கோமாதா என்று தெய்வத்துக்கு சமமாக நாம் கருதும் பசு மாடுகளை தாக்கும் கோமாளை என்ற நோயைப்பற்றி எடுக்கப்பட்ட ஒரு இசை ஆல்பத்தில் பாடி நடித்துள்ளார் சின்னப்பொண்ணு.
மாடு வளர்க்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அப்பாடலை பாடியிருப்பதால், இப்பாடல் எனக்கு பெரிய ஆத்மதிருப்தியை அளித்திருக்கிறது.
வாயில்லா ஜீவன்களை காப்பாற்றுவதற்காக ஒரு கருத்துள்ள பாடலை என்னை பாட வைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று சொல்லும் சின்னப்பொண்ணு, இந்த பாடலை பாடுவதற்காக பணமே வாங்கிக்கொள்ளவில்லையாம்.
இப்படியொரு பாடலை பாட வாய்ப்பு கிடைத்ததே பெரிய சன்மானம்தான் என்று தனது பெருந்தன்மையை காண்பித்து விட்டாராம்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை