மார்கட்டு இல்லாத கார்த்திகா அடுத்து “புறம்போக்கு” இல்
கோ படத்தில் அறிமுகமான போது அடுத்த சிம்ரன் ரேஞ்சில் பேசப்பட்ட கார்த்திகாவுக்கு கடைசியில் கிடைத்தது அருண் விஜய் ஜோடியாக டீல் என்ற ஒரேயொரு படம். அதுவும் முடிந்து ரிலீஸாகாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எந்த மொழியிலும் வாய்ப்பு இன்றி, நான் சினிமாவுக்கு வந்ததே ஒரு விபத்து, அதனால படிக்கப் போறேன் என சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் ஸ்டேட்மெண்ட்விடும் அளவுக்கு ஆனது நிலைமை.
இப்படி எந்தப் படத்திலும் பட்டா போடப்படாமல் இருந்தவரை தனது புறம்போக்கில் ஒப்பந்தம் செய்திருக்கிறார் எஸ்.பி.ஜனநாதன். புறம்போக்கைப் பொறுத்தவரை இரண்டு ஹீரோக்கள் ஆர்யா, விஜய் சேதுபதி. ஆனால் ஹீரோயின் ஒருவர்தான். அது கார்த்திகா என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.யுடிவி தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு ஜனவரியில் குலுமணாலியில் தொடங்குகிறது.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை