சவாலான பிரிவில் சாய்னா
சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பாட்மிண்டன் சம்மேளனத்தின் சூப்பர் சீரிஸ் மாஸ்டர்ஸ் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் புதன்கிழமை தொடங்குகிறது.
இதில் பங்கேற்றுள்ள உலகின் 6-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால், உலகின் முதல் நிலை வீராங்கனை லீ ஸியூரூய் இடம்பெற்றுள்ள பி பிரிவில் இடம்பெற்றுள்ளார். அதனால் இந்த முறை சாய்னாவுக்கு கடும் சவால் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாய்னா தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானின் மினட்சு மிதானியை சந்திக்கிறார்.
ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் தலா 8 பேர் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவர். ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளிலும் போட்டி நடைபெறுகிறது.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை