பந்தாடும் நாயகர்கள், பாவம் கார்த்திகா
ஆர்யா மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் புறம்போக்கு படத்தில் ஆர்யா, சமூக சேவகராகவும், விஜய் சேதுபதி ரயில்வே ஊழியராகவும் நடிக்கின்றார்களாம். இருவரும் நண்பர்களாக இருந்து பின்னர் ஒரு பெண்ணின் காதலால் மோதிக்கொள்வதுதான் கதை. இந்த கதையில் நாயகியின் வேடத்திற்கு கோ, அன்னக்கொடி ஆகிய படங்களில் நடித்த கார்த்திகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கார்த்திகா யாருக்கு ஜோடி? ஆர்யாவுக்கா? அல்லது விஜய் சேதுபதிக்கா? என்ற சஸ்பென்ஸ் படக்குழுவினரை போட்டு குழப்பியது. ஆர்யாவிடம் இதுகுறித்து கேட்டபோது கார்த்திகா விஜய் சேதுபதிக்குத்தான் ஜோடி எனக்கு ஜோடி இன்னும் முடிவாகவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் விஜய்சேதுபதியோ கார்த்திகாவின் உயரத்திற்கு ஆர்யா தான் சரிப்பட்டு வருவார். எனக்கு வேறொரு ஜோடியை இயக்குனர் இனிமேல்தான் முடிவு செய்வார் என்று கூறியுள்ளார்.
கடைசியாக கார்த்திகா நடித்த படம் படு பிளாப் ஆனதால் இருவருமே அவருடன் ஜோடி விரும்பவில்லையோ என படக்குழுவினர் கிசுகிசுத்தனர். இந்த தகவல் கேட்டு இயக்குனர் அதிர்ச்சி அடைந்துள்ளார். கார்த்திகா இருவருக்குமே ஜோடி இல்லை. அவர் இந்த படத்தில் தனியாகத்தான் நடிக்கிறார் என்று கூறினார். மேலும் இந்த படத்தின் முதல் டீஸர் வரும் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் செய்தியாளர்களிடம் கூறினார்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை