அடுத்து ரஜினியுடன் ஷங்கர் இணைகிறார்..????
கோச்சடையான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தெளிவான தகவல்கள் வராத நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம் என்ன... இயக்குநர் யார் என்ற பேச்சுகள் மீண்டும் ஒரு ரவுண்ட் வர ஆரம்பித்துள்ளன. கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படத்தை கேவி ஆனந்த் அல்லது கேஎஸ் ரவிக்குமார் இயக்குவார்கள் என்று பேசப்பட்டுவந்தது.
ஆனால் இப்போது, ஐ படத்தை ஏப்ரலில் முடித்துவிட்டு, அடுத்து ரஜினியுடன் ஷங்கர் இணைகிறார் என்று செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. ஏற்கெனவே ஷங்கரும் ரஜினியும் நேரில் சந்தித்துப் பேசிய போதும் இதே போன்ற பேச்சுகள் கிளம்பின. ஆனால் இதுபற்றி வழக்கம்போல மவுனம் காத்தனர் ரஜினியும் ஷங்கரும். இன்னொரு பக்கம், சந்திரமுகி 2-ம் பாகம் குறித்தும் செய்திகள் கிளம்பியுள்ளன. இயக்குநர் பி வாசுவுடன் இதுபற்றி ரஜினி விவாதித்து வருவதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் வாசு படத்தை ரஜினி ஒப்புக் கொள்வாரா என்பது சந்தேகமே. காரணம், சந்திரமுகி பாகம் 2 ஏற்கெனவே தெலுங்கில் வெளியாகிவிட்டது. அந்தப் படத்தை தமிழில் செய்யும் எண்ணமில்லை என்று ரஜினியும் கூறிவிட்டார். எனவே ஷங்கர்தான் ரஜினியின் அடுத்த தெரிவாக இருக்கும் என்றும், ஆனால் ரோபோ மாதிரி ரிஸ்க் அதிகம் உள்ள கதையாக இல்லாமல், சிவாஜி மாதிரி பொழுதுபோக்குப் படமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள். சூப்பர் ஸ்டாரை வைத்து இன்னொரு முதல்வனை உருவாக்குங்க ஷங்கர்!
கருத்துகள் இல்லை