அசரடிக்கும் லினோவாவின் வைப் X மொபைல்.
மொபைல் உலகில் மிக குறுகிய காலத்தில் சாம்சங்கின் முக்கிய போட்டியாளராக வந்துவிட்டது லினோவா அந்த அளவுக்கு அதன் மொபைல் மாடல்கள் இன்று மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. லினோவாவின் மொபைல் வெற்றி வரிசையில் அடுத்து வெளிவந்திருப்பது லினோவா வைப் X (Lenovo Vibe X) ஆகும்.
இந்த மொபைலில் என்னென்ன இருக்குன்னு அப்படியே ஒரு ரவுன்ட் பார்க்கலாமாங்க 5 இன்ச் நீளம் கொண்ட இந்த மொபைல் கொரிலா கிளாஸூடன் வெளிவருதுங்க. மேலும் இதில் Quad-core Cortex A7 பிராஸஸர் 1.5 GHz இருக்குதுங்க மற்றும் 2 GB க்கு ரேம், ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஓ.எஸ் என அனைத்தும் இதில் இருக்குதுங்க.
அடுத்து கேமராவ பாத்தா 13MP க்கும் பிரன்ட் கேமரா 5MP க்கும் இதுல இருக்குங்க கேமரா கிளாரிட்டியும் அப்ப நல்லா இருக்கும்னு எதிர்பாக்கலாம்ங்க. இதோட எடை 121 கிராம்ஸ் 2000mAh பேட்டரி கொடுத்திருக்காங்க மேலும் 16GB க்கு இன்பில்டு மெமரியும் இதுல இருக்குது என்பது மேலும் ஒரு கொசுறு தகவல்ங்க
இதோ விலை ரூ.82000ங்க.(இலங்கை)
Get in Touch With Us to Know More

கருத்துகள் இல்லை