2014 இல் உலகை அலங்கரிக்கும் விளையாட்டு விழாக்கள்
உலக அரங்கில் இடம்பெறும் விளையாட்டுகளில் தத்தமக்கு பிடித்த விளையாட்டை மக்கள் ரசிப்பதற்கு ஏது வான வகையில் 2014இல் பல்வேறு தனி விளையாட்டு நிகழ்ச்சிப் போட்டிகளும் பல்வகை விளையாட்டு நிகழ்ச்சிப் போட்டிகளும் நடை பெறவுள்ளன.
யூசெய்ன் போல்ட், லயனல் மெசி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, குமார் சங்கக்கார, விராத் கோஹ்லி, கோரி அண்டர்சன், ஷேன் வொட்சன், செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரப்போவா, செபெஸ்டியன் வெட்டெல் போன்ற இன் னும் பல வீர, வீராங்கனைகளின் ஆற்றல் ெவளிப்பாடுகளைக் கண்டு இவ்வுலகம் ஆனந்த பிரவாகத்தில் மூழ்கவுள்ளது.
இவ் வருடம் நடைபெறவுள்ள பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் முழு உலகையும் பரபரப்பில் ஆழ்த்தக்கூடிய சர்வ தேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளன (ஃபீஃபா) உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டிகள் றியோ டி ஜெனெய்ரோவில் 2014 ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை நடைபெறவுள்ளன.இப்போட்டிகளை ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிறேஸில் முன்னின்று நடத்துகின்றது.
முதலாவது உலக சம்பியன் உட்பட இரண்டு தடவைகள் உலக சம்பியனான உருகுவே, நான்கு தடவைகள் உலக சம்பியனான இத்தாலி, மூன்று தடவைகள் சம்பயினான ஜேர்மனி, இரண்டு தடவைகள் சம்பியனான ஆர்ஜன்டினா, தலா ஒரு தடவை சம்பியனான இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் உட்பட 32 நாடுகளைச் சேர்ந்த 736 வீரர்களின் கால்பந்தாட்ட நுட்பத் திறன்களையும் ஆற்றல்களையும் இவ் வருட உலகக் கிண்ண போட் டிகளில் ரசிகர்களுக்கு காணக் கூடியதாக இருக்கும்.
இதனைவிட 20 வயதின்கீழ் மகளிர் மற்றும் 17 வயதின் கீழ் மகளிர் உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
உலக இருபதுக்கு 20 கிரிக்கட்
ஆண், பெண் இரு பாலாருக்குமான சர்வதேச கிரிக்கட் பேரவை (ஐசிசி) உலக இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகள் பங்களாதேஷில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளன. எனினும் பங்களாதேஷில் நிலவும் அரசியல் கொந்தளிப்பு காரணமாக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு நிலைமைகள் குறித்து சர்வதேச கிரிக்கட் பேரவை கண்காணித்து வருகின்றது. ஆண்களுக்கான போட்டிகளில் 16 நாடுகளைச் செர்ந்த 240 வீரர்களினதும் பெண்களுக்கான போட்டிகளில் 10 நாடு களைச் சேர்ந்த 140 வீராங்கனைகளதும் கிரிக்கட் ஆற்றல்களைக் காணக்கூடியதாக இருக்கும்.
உலக இருபதுக்கு 20 போட்டிகளுக்கு முன்பதாக ஐந்து நாடுகள் பங்குபற்றும் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் பங்களாதேஷில் நடைபெறவுள்ளது. இதில் ஐந்தாவது நாடாக ஆப்கானிஸ்தான் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ரஷ்யாவின் சொச்சி பிராந்தியத்தில் பெப்ரவரி 7 முதல் 23 வரை நடைபெறவுள்ளது.
15 வகையான விளையாட்டுகளில் 98 வகையான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இப்போட்டிகளில் 85 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2500 ஆண், பெண் போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
பொதுநலவாய மற்றும் ஆசிய
விளையாட்டு விழாக்கள்
இலங்கை உட்பட 70 நாடுகள் பங்குபற்றும் பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழா ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோவில் ஜூன் 13 முதல் ஜூலை 13 வரை நடைபெறவுள்ளது. இவ் விழாவில் தனிநபர் மற்றும் குழுநிலை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற வுள்ளன. 17 வகையான விளை யாட்டுகளில் 250க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களுக்கான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இவ் வருட பொதுநலவாய விளையாட்டு விழா வில் 6,000க்கும் மேற்பட்ட வீர, வீராங் கனைகள் பங்குபற்றவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மற்றொரு பல்வகை விளையாட்டுப் போட் டிகளை அரங்கேற்றும் ஆசிய விளையாட்டு விழா, தென் கொரியாவின் இன்சொன் நகரில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ளன. 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,000 வீர, வீராங்கனைகள் 40 க்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் 450க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களுக்காக போட்டியிடுவர்.
இளையோர் ஒலிம்பிக் விழா
இலங்கை பங்குபற்றவுள்ள மற்றொரு விளையாட்டு விழா இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவாகும். இரண்டாவது தடவையாக நடைபெறும் இவ் விளையாட்டு விழா சீனாவின் நாஞ்சிங் நகரில் ஆகஸ்ட் 16 முதல் 28வரை நடைபெறவுள்ளன. சர்வதேச அரங்கில் எதிர்கால வீளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்கும் களமாக இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழா அமைகின்றது.
ஆசிய வலைபந்தாட்டப் போட்டிகள்
இலங்கை நம்பிக்கையுடன் பங்குபற்றும் மேலும் ஒரு சர்வதேச போட்டியாக ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளன. இவ் வருடம் மீண்டும் ஆசிய சம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்கும் பொருட்டு இலங்கை வலைபந்தாட்டக் குழாம் புதிய பயிற்றுநரின்கீழ் தீவிர பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.
இதர விளையாட்டுப் போட்டிகள்
மகளிர் உலகக் கிண்ண றக்பி, உலக உடற்கலை சாகச (ஜிம்னாஸ்டிக்ஸ்) வல்லவர் போட்டிகள், உலக சுவட்டு சைக்கிளோட்ட வல்லவர் போட்டிகள், வழமையான நான்கு க்ராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள், ஃபோர்ம்யூலா வன் க்ரோன் ப்றீ காரோட்டப் போட்டி என்பனவும் இவ்வருடம் விளையாட்டுலகை அலங் கரிக்கவுள்ளன.
கருத்துகள் இல்லை