ஆசஷ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலியா 326 ரன்னில் சுருண்டது
டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி கேப்டன் கூக் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் வார்னர் 16 ரன்னிலும், ரோஜர்ஸ் 11 ரன்னிலும் போல்டு ஆகி வெளியேறினர்.
கேப்டன் கிளார்க் 10 ரன்னில் அவுட் ஆனார். வாட்சன் மட்டும் சிறிது நேரம் தாக்கு பிடித்து ஆடினார். அவர் 43 ரன் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் ஜார்ஜ் பெய்லி (1 ரன்) வந்த வேகத்தில் வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலியா 97 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.அதன்பின் பிராட் ஹாடின்– ஸ்டீவன் ஸ்மித் ஜோடி சரிவில் இருந்து மீட்டது. இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளித்து ரன்களை சேர்த்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 200 ரன்னை கடந்தது.
தேனீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுக்கு 201 ரன் எடுத்து இருந்தது. பிராட் ஹாடின் 59 ரன்னிலும், ஸ்மித் 48 ரன்னிலும் இருந்தனர். தேனீர் இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடியது. சிறப்பாக ஆடி வந்த ஹாடின் 75 ரன்னில் ஆட்டம் இழந்தார். எதிர்முனையில் ஆடிய ஸ்மித் சதம் அடித்தார். சதம் அடித்த சிறிது நேரத்தில் 115 ரன் இருக்கும் போது விக்கெட் பறிகொடுத்தார். அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்ததால் ஆஸ்திரேலிய அணி 326 ரன்னில் சுருண்டது.
கருத்துகள் இல்லை