சிம்புவுடன் முத்த காட்சியில் நடிக்க ரூ.50 லட்சம் கேட்ட நடிகை தீக்ஷா சேத்
சிம்புவை முத்தமிட நடிகை திக்ஷாசேத் ரூ.50 லட்சம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இருவரும் வேட்டை மன்னன் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். ஹன்சிகா, ஜெய், சந்தானம், வி.டி.வி. கணேஷ், போன்றோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.
இப்படத்தில் சிம்புவும் தீக்ஷா சேத்தும் உதட்டோடு உதடு முத்தமிடுவது போன்று சில காட்சிகளை வைக்க டைரக்டர் விரும்பினார். தீக்ஷாசேத் ஏற்கனவே விக்ரம் ஜோடியாக ராஜ பாட்டை படத்தில் நடித்தார். தெலுங்கிலும் முன்னனி நடிகையாக உள்ளார். அங்கு கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார்.
தீக்ஷா சேத்தை அணுகி முத்த காட்சியில் நடிக்கும்படி கேட்டனர். முதலில் மறுத்த அவர் பிறகு சம்மதித்தார். முத்தக்காட்சிகளில் நடிப்பதற்காக மட்டும் ரூ.50 லட்சம் தர வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இதனால் படக்குழுவினர் அதிர்ந்தனர்.சம்பளத்தை தவிர்த்து முத்த காட்சிக்கு மட்டும் அவர் ரூ.50 லட்சம் கேட்டாராம். கேட்ட தொகையை கொடுப்பதா? அல்லது முத்த காட்சி வேண்டாம் என விட்டு விடுவதா என்ற யோசனையில் படக்குழுவினர் உள்ளனர்.
கருத்துகள் இல்லை