இப்படிக்கூட ஒரு ஹீரோயின் இருப்பாரா? புது இயக்குநர் ஆனந்த் சங்கர்.
இவன் வேற மாதிரி படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபு நடிக்கும் படம் அரிமா நம்பி. பிரியா ஆனந்த் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ட்ரம்ஸ் சிவமணி இசை அமைக்கிறார். படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். கிட்டத்தட்ட படப்பிடிப்பு நிறைவடையும் கட்டத்தில் உள்ளது.
அரிமா நம்பி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஆனந்த் சங்கர் கூறுககையில், "உதவி இயக்குனராக பணியாற்றியபோது பல கதாநாயகிகள் படப்பிடிப்புக்கு வந்தால் என்னென்ன அலம்பல் பண்ணுவார்கள் என்று நானே பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தின் நாயகியான ப்ரியா ஆனந்த் ரொம்ப வித்தியாசமானவர். படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் எந்த பந்தாவும் காட்ட மாட்டார். ஹீரோயின்கள் வழக்கமாகக் கேட்கும் பல விஷயங்களை அவர் கேட்டதே இல்லை. இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் கூட இருப்பார்களா? இப்படியெல்லாம் இருந்தா, உங்களை ஹீரோயின்னு நாங்களே நம்ப மாட்டோம்.. கேரவன் சரியில்ல, ரூம் நல்லால்ல, சரியா கவனிக்கல.. இப்படி எதையாவது சொல்லி சண்டை போடுங்க.. என்று நாங்களே ஜாலியாக கலாய்க்கும் அளவுக்கு அவர் எளிமையாக நடந்து கொண்டார். மறக்கமுடியாதவர்," என்றார்.
கருத்துகள் இல்லை