இயக்குனர் சுந்தர்.சி அஜித்திற்காக ஒரு கதையை தயார் செய்துள்ளாராம்...
கௌதம் மேனன் இயக்கத்திற்கு பிறகு ‘தல’ அஜித் யாருடைய படத்தில் நடிக்கப்போகிறார் என்ற பேச்சு அலை கோடம்பாக்கத்தில் எழுந்துள்ளன.சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வீரம் படம் பொங்கல் ஜல்லிகட்டில் களமிறங்க தயாராக உள்ளது.
இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 15ம் திகதி முதல் கௌதம் மேனன் இயக்கவிருக்கும் பெயரிப்படாத படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.
ஆனால் இந்தப்படத்திற்கு பிறகு தலயின் அடுத்த படம் யாருக்கு என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், காற்று வழியாக இரண்டு தகவல்கள் கசிந்துள்ளன.
சூப்பர் ஸ்டாருக்காக தயாரிக்கப்பட்ட கதையை எடுத்துக்கொண்டு அஜித்தை அனுகியுள்ளாராம் கேவி.ஆனந்த். மற்றொருபுறம் இயக்குனர் சுந்தர்.சி அஜித்திற்காக ஒரு கதையை தயார் செய்துள்ளாராம்.
ஆனால் இதற்கெல்லாம் ஒரு முடிவும் இன்னும் வெளியாகவில்லை, புத்தாண்டை கொண்டாட அவுஸ்திரேலியா பறந்த அஜித் திரும்பி வந்த பிறகே இதற்கான பதில்கள் கிடைக்குமாம்.
Get in Touch With Us to Know More

கருத்துகள் இல்லை