காதல் என்ற ஒன்று பெண்ணுக்குள் வந்துவிட்டால்....
சில சமயங்களில் அந்த மாற்றங்களால், காதனுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, இருவருக்குள் சண்டையை கூட உண்டாக்கிவிடும். இல்லாவிட்டால், அந்த பெண்களின் செயல்களைப் பார்த்தால் நகைச்சுவையாக கூட இருக்கும். இதனைப் பற்றி ஆண்களிடம் கேட்டால், அவர்களும் இதற்கு ஆம் என்று தான் சொல்வார்கள். ஏனெனில் பொதுவாக பெண்கள் மற்ற காதலர்களின் கதையைக் கேட்கும் போது, அப்படியெல்லாமா இருப்பார்கள், இதெல்லாம் நகைச்சுவையாக உள்ளதே, நான் அப்படி இருக்கமாட்டேன் என்றெல்லாம் சொல்வார்கள்.
ஆனால் காதல் வந்த பின்பு பார்த்தால், அவர்களும் இந்த நகைச்சுவையான மற்றும் எரிச்சலூட்டும் செயல்களை செய்வார்கள். இப்போது காதலிக்கும் பெண்கள் செய்யும் சில பொதுவான விஷயங்களைப் பார்ப்போம்.
- காதலிக்கும் பெண்கள் தங்கள் காதலன் அனுப்பிய மெசேஜ்ஜை ஒரு முறை படிப்பதுடன், பலவாறு பலமுறை படிப்பார்கள். அதிலும் அந்த மெசெஜ் ரொமான்டிக்கானதாக இருந்தால், அவ்வளவு தான், அதைப் படித்து படித்து சிரித்துக் கொண்டே இருப்பார்கள்.
- காதல் வந்துவிட்டால், பெண்கள் தங்கள் காதலன் எந்நேரமும் தன்னுடன் பேசிக் கொண்டு, மெசேஜ் செய்து கொண்டு இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். இது தவறல்ல. ஆனால் ஒரு கட்டத்தில் இது அழுத்துப் போய்விடும். பின் இதனாலேயே இருவருக்குள் அடிக்கடி சண்டை வந்து, இறுதியில் பிரிவை சந்திக்க நேரிடும்.
- சில பெண்கள் எந்நேரமும் தங்களது திருமணம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி யோசனை செய்து கொண்டே இருப்பார்கள். மேலும் தன் காதலுடன் எப்போதும் இதைப் பற்றியே பேசிக் கொண்டே இருப்பார்கள்.
- சிலரோ இவ்வுலகில் தனக்கு வேறு யாரும் தேவையில்லை, எனக்கு என் காதலன் மட்டும் போதும் என்று நினைப்பார்கள். இதற்காக பெற்றோர்கள், நண்பர்கள் போன்றவர்களுடன் வெளியே செல்வதை தவிர்த்து, எப்போதும் தன் காதலனுடனேயே வெளியே செல்ல திட்டம் தீட்டுவார்கள்.
மேற்கூறியவாறு சில பெண்கள் இருப்பதுடன், சிறு சண்டை என்று வந்துவிட்டால், உடனே அந்த சண்டையைப் பற்றி தன் நண்பர்களுடன் ஆலோசனை செய்வார்கள். ஆனால் ஆண்களுக்கு எப்போதும் இந்த செயல் பிடிக்காது, அவர்களும் இதை ஒரு போதும் செய்யமாட்டார்கள். ஏனெனில் இருவருக்குள் நடக்கும் எந்த ஒரு விஷயத்திலும் வேறு ஒருவர் நுழைவதை ஆண்கள் விரும்பமாட்டார்கள்.
கருத்துகள் இல்லை