மனைவிக்கும் மருமகனுக்கும் மணம் முடித்துவைத்த மாமா ”மாமா”ஆனார்
நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சென்டரிங் தொழிலாளி (32) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால், அருகில் உள்ள தனது தாய் மாமன் வீட்டில் சில காலம் லிங்கேஷ் தங்கி இருந்தார். இவரது மாமாவுக்கு வயது 52. தொழிலாளி. இவருக்கு 48 வயதில் மனைவி உள்ளார். ஆனால் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அப்போது, அத்தைக் கும், மருமகனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இந்த விவரம் தெரிய வந்ததும், மருமகனை அவரது மாமா கண்டித்தார். ஆனாலும், இருவருக்கும் இடையேயான தொடர்பு தொடர்ந்தது.
இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதற்கு மாமாவே சாட்சி கையெழுத்திட்டார். இதற்கிடையே மருமகன் அவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்தபோது தான் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரியவந்தது. தனது மகனை மீட்டு தருமாறு மருமகனின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.
போலீஸ் நடத்திய பேச்சு வார்த்தையின்போது பதிவு திருமணம் செய்த சான்றிதழ், அதில் மருமகனுக்கு மாமாவே சாட்சி கையெழுத்திட்ட விவரம் உள்ளிட்டவற்றை சமர்ப்பித்தனர். இதனால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல், எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர். இப்போது அத்தை - மருமகன் ஜோடியை எவ்வாறு பிரிப்பது என்பதில் உறவினர்கள் தீவிர ஆலோசனையில் உள்ளனர்.
கருத்துகள் இல்லை