இலங்கை - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் சமநிலையில் நிறைவு
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை 204 ஓட்டங்களையும், பாகிஸ்தான் 383 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.
இந்த நிலையில் 142 ஓட்டங்களால் பாகிஸ்தான் முன்னிலையில் இருக்க தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 420 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 116 ஓட்டங்களுடனும், பிரசன்ன ஜெயவர்த்தன 48 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தநிலையில், ஐந்தாவதும் இறுதியுமான இன்றைய நாளில் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 480 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை இரண்டாவது இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டது.
மெத்தியூஸ் 157 ஓட்டங்களுடனும், பிரசன்ன ஜெயவர்த்தன 63 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன்படி 302 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளை போட்டிவெற்றி தோல்வியின்றி நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டது. இலங்கை அணி வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவுசெய்யப்பட்டார்.
கருத்துகள் இல்லை