• Breaking News

    சவுதியில் விமானத்தோடு பறந்த உடல் உறுப்புகள்

    சவூதி அரேபியாவில் பறந்த விமானத்திலிருந்து மனித உடல் உறுப்புகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எல்லைத் தாண்டிச் செல்லும் பலர் கிடைக்கும் விமானத்தில் ஏறி விரைவது சவூதி விமான நிலையங்களில் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் ஒரு ஜெட்  விமானம் பறக்கும்போது மனிதரின் உடல் உறுப்புகள் கீழே விழந்துள்ளன.



    இதுகுறித்து பொலிஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் பின் நசீர் கூறுகையில், அதிகாலை 2.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. முஷ்ரபா பகுதியில் மனித உடல் உறுப்புகள் விமானத்திலிருந்து விழுந்ததாக அந்தத் தகவல் வந்தது.

    இதையடுத்து நாங்கள் அங்கு விரைந்து சென்று பார்த்த போது விமானத்தின் லேன்டிங் கியர் பகுதியிலிருந்து உடல் உறுப்புகள் விழுந்ததாக தெரியவந்துள்ளது என்றும் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad