நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு....
தன்னுடைய பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி விஷமிகள் சிலர் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காமெடி நடிகர் பரோட்டா சூரி புகார் அளித்துள்ளார். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமாகி பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வருபவர் பரோட்டா சூரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு பரபரப்பான புகார் மனு கொடுத்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும்நான் பொதுமக்கள் மத்தியிலும் - ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த மரியாதையுடன் விளங்கி வருகிறேன். பொது விவகாரங்களில் தலையிடுவதோ அல்லது எதைப் பற்றியும் கருத்து சொல்வதோ கிடையாது. ஆனால் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி அவதூறாக பேசியிருப்பதாக கூறி சில பத்திரிகையாளர்கள் என்னிடம் கருத்து கேட்டார்கள்.
பதறிப்போன நான் அது பற்றி விசாரித்த போது எனது பெயரில் விஷமிகள் சிலர் ‘ஃபேஸ் புக்' கணக்கு ஆரம்பித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவது தெரிய வந்தது. டுவிட்டர், ஃபேஸ்புக்கில் பங்கேற்கும் அளவுக்கு நான் படித்தவன் இல்லை. ஆனால் எனது பெயரில் 3 ஃபேஸ்புக் கணக்குகள் தொடங்கி எனக்கு எதிரான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர். எனவே, எனது பெயரிலான ஃபேஸ்புக் கணக்குகளை முடக்கி வைக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை