• Breaking News

    டெல்லி விமான நிலைய ஓடுதளங்களிலும் அடர்ந்த பனி மூட்டம்

    தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான பனி பெய்து வருகிறது. இரவு முழுவதும் இடைவிடாது பெய்யும் பனியினால் ஏற்படும் மூட்டம் காலை 10 மணி வரையிலும் விலகாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாக நேர்ந்துள்ளது.



    ரெயில் பாதைகளிலும் தொலை தூரத்தில் உள்ள காட்சிகளை தெளிவாக காண இயலவில்லை. இதே போல், டெல்லி விமான நிலைய ஓடுதளங்களிலும் அடர்ந்த பனி மூட்டம் படர்ந்திருப்பதால் விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்பட்டு செல்வதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    நேற்றிரவு 7 மணியில் இருந்தே பனி கொட்டத் தொடங்கியதால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 100 மீட்டர் தூரத்தை கடந்து காட்சிகளை தெளிவாக காண முடியவில்லை.

    விமானங்கள் பாதுகாப்பாக தரை இறங்க ஓடுபாதையில் 75 மீட்டர் தூரம் வரை உள்ள காட்சிகள் தெளிவாக தெரிய வேண்டும். தரையில் இருந்து உயர எழுவதற்கு 125 மீட்டர் தூரம் வரை உள்ள காட்சிகள் தெளிவாக தெரிய வேண்டும்.

    இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானங்களும் இங்கு தரை இறங்க வேண்டிய விமானங்களும் மூடுபனியால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    இதனையடுத்து, நேற்று இரவு 10 மணியில் இருந்து இன்று காலை 8 மணி வரை சுமார் 90 விமான சேவைகளை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ரத்து செய்துள்ளது.  இங்கு தரையிறங்க வேண்டிய 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் லக்னோ, அமிர்தசரஸ் விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாக நேர்ந்தது.

    இரத்து செய்யப்பட்ட விமானங்களில் செல்வதற்காக செலுத்தப்பட்ட கட்டணங்களை திரும்பப் பெறுவதற்காக ஏராளமானவர்கள் விமான நிலைய வரவேற்பு பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad