• Breaking News

    உரையாடுபவரின் முப்பரிமாணத் தோற்றத்தை காட்சிப்படுத்தும் தொலைபேசி


    மறு­பக்­கத்தில் உரை­யா­டலில் ஈடு­பட்­டுள்­ள­வரின் முப்­ப­ரி­மாணத் தோற்­றத்தை காட்­சிப்­ப­டுத்தி, அவ­ருடன் நேருக்கு நேர் சந்­தித்து உரை­யா­டு­வது போன்ற உணர்வைத் தரும் மாதிரி தொலை­பே­சியை எதிர்­வரும் வருட இறு­திக்குள் அறி­மு­கப்­ப­டுத்த போலந்து கம்­ப­னி­யொன்று நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்­ளது.


    1977ஆம் ஆண்டு வெளி­யாகி வசூல் சாதனை படைத்த "ஸ்டார் வார்ஸ்" திரைப்­ப­டத்தின் கதாநாய­கியை குறிக்கும் வகையில் மேற்­படி கம்­ப­னிக்கு யெலிஸா டிஸ்­பிளே சிஸ்டம்ஸ் என பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.


    இந்த நிறு­வ­ன­மா­னது முப்­ப­ரி­மாண விம்ப உப­கரணங்­களை வெற்­றி­க­ர­மாக ஸ்தாபித்­த­தை­ய­டுத்து, அந்த தொழில்­நுட்­பத்தை உள்­ள­டக்­கிய மாதிரி தொலைபேசியை எதிர்­வரும் வரு­டத்­துக்குள் அறி­மு­கப்­ப­டுத்தவுள்­ளது.இந்தக் தொலை­பேசி எதிர்வரும் 5 வருட காலப்பகுதியில் பொதுமக்களுக்கு பாவனைக்கு விடப்படவுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad