உரையாடுபவரின் முப்பரிமாணத் தோற்றத்தை காட்சிப்படுத்தும் தொலைபேசி
மறுபக்கத்தில் உரையாடலில் ஈடுபட்டுள்ளவரின் முப்பரிமாணத் தோற்றத்தை காட்சிப்படுத்தி, அவருடன் நேருக்கு நேர் சந்தித்து உரையாடுவது போன்ற உணர்வைத் தரும் மாதிரி தொலைபேசியை எதிர்வரும் வருட இறுதிக்குள் அறிமுகப்படுத்த போலந்து கம்பனியொன்று நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
1977ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த "ஸ்டார் வார்ஸ்" திரைப்படத்தின் கதாநாயகியை குறிக்கும் வகையில் மேற்படி கம்பனிக்கு யெலிஸா டிஸ்பிளே சிஸ்டம்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிறுவனமானது முப்பரிமாண விம்ப உபகரணங்களை வெற்றிகரமாக ஸ்தாபித்ததையடுத்து, அந்த தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மாதிரி தொலைபேசியை எதிர்வரும் வருடத்துக்குள் அறிமுகப்படுத்தவுள்ளது.இந்தக் தொலைபேசி எதிர்வரும் 5 வருட காலப்பகுதியில் பொதுமக்களுக்கு பாவனைக்கு விடப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை