ஆசஷ் கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்: ஒயிட்வாஷ் நிலையில் இங்கிலாந்து அணி
ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஷ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இதுவரை நடந்த 4 டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் 381 ரன் வித்தியாசத்திலும் அடிலெய்ட்டில் நடந்த 2–வது டெஸ்டில் 218 ரன்னிலும், பெர்த்தில் நடைபெற்ற 3–வது டெஸ்டில் 150 ரன்னிலும், மெல்போர்னில் நடந்த 4–வது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் மோதும் 5–வது மற்றும் கடைசி ஆசஷ் டெஸ்ட் சிட்னியில் நாளை (3–ந்தேதி) தொடங்குகிறது.4 டெஸ்டிலும் மோசமாக தோற்ற கூக் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்த டெஸ்டிலும் தோல்வி அடைந்து ‘ஒயிட்வாஷ்’ ஆக வாய்ப்பு உள்ளது.5 டெஸ்டிலும் வென்று இங்கிலாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்யும் இலக்குடன் ஆஸ்திரேலியா உள்ளது.
இந்த டெஸ்டில் வெற்றி பெற்று ஆறுதல் பெற வேண்டும் என்று இங்கிலாந்து உள்ளது. ‘டிரா’ செய்து ஒயிட் வாஷை தவிர்க்க கடுமையாக போராட வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ளது.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை