• Breaking News

    கம்பியூட்டரில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்....!


    இன்று கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்பட்டு, இயங்காமல் போவதும், இயக்கம் எதிர்பார்த்தபடி இல்லாமையும், அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும். ஆனால், எதனால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அறிந்து கொள்வதும் ஒரு பிரச்னையாக நமக்குத் தோன்றும். பிரச்னைக்குரிய காரணம் ஹார்ட்வேர் சாதனங்களினாலா அல்லது சாப்ட்வேர் தொகுப்பினாலா என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை.

    ஏனென்றால், இந்த இரண்டு வகை காரணங்களினால் ஏற்படும் பிரச்னைகள் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும். எடுத்துக் காட்டாக, புளு ஸ்கிரீன் ஆப் டெத் எனப்படும் இயக்க முடக்கம், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆகிய இரண்டாலும் ஏற்படலாம். இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டர்: இந்த பிரச்னை எல்லாருக்கும் ஏற்படுவது. அதிக எண்ணிக்கையில், கம்ப்யூட்டர் தொடங்கும்போதே இயங்கத் தொடங்கும் சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னர், கம்ப்யூட்டர் அவற்றின் சுமை தாங்காமல், இயக்க வேகத்தினைக் குறைவாக்கும். அல்லது ஏதேனும் மால்வேர் தாக்கினால், அப்போதும் வேகம் குறையத் தொடங்கும்.

    ஆனால், நாம் என்ன எண்ணுகிறோம். கம்ப்யூட்டர் வாங்கி பல ஆண்டுகள் அல்லது மாதங்கள் ஆகிவிட்டன. அதனால், இயக்க வேகம் குறைந்துவிட்டது என்று முடிவு கட்டுகிறோம். இந்த சிந்தனை தொடர்ந்து இருப்பதனால், கம்ப்யூட்டரை மூட்டை கட்டி வைத்துவிட்டு, புதிய கம்ப்யூட்டரை வாங்கிப் பயன்படுத்துகிறோம். இது தவறான கணிப்பாகும். கம்ப்யூட்டரின் செயல்வேகம் குறைகிறது என்றால், அதற்குக் காரணம் சாப்ட்வேர் பிரச்னையாகும். ஹார்ட்வேர் சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டால், இயக்கம் முடங்கிப் போகுமே ஒழிய, வேகம் குறையாது. சில நேரங்களில், சி.பி.யு. அதிக சூடாகிப் போனால், வேகம் குறையலாம். ஆனால், இது எப்போதாவது ஏற்படுவதுதான்.

    விண்டோஸ் இயக்கத்தில், அது முடங்கிச் செயலற்றுப் போகும் நிலை ஏற்பட்டால், புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்னும் நிலை காட்டப்படும். ஆனால், புதிய விண்டோஸ் இயக்கத் தொகுப்புகள் பழைய தொகுப்புகளைப் போலின்றி, நிலையாக இயங்குகின்றன. நல்ல ஹார்ட்வேர் சாதனங்களுடன், சிறப்பான ட்ரைவர் புரோகிராம்களுடன் இயங்கும் ஒரு சிஸ்டம், என்றைக்கும் புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்ற நிலைக்குச் செல்லாது.

    ஆனால், அடிக்கடி இந்த ஸ்கிரீன் தோன்றினால், உங்கள் ஹார்ட்வேர் சாதனங்களில் ஒன்றில் பிரச்னை இருக்கலாம். அல்லது, தவறான ட்ரைவர் புரோகிராம்களால் ஏற்படலாம். நீங்கள் சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றினை அண்மையில் கம்ப்யூட்டரில் பதிந்திருந்தாலோ, அல்லது ஹார்ட்வேருக்கான ட்ரைவர் புரோகிராம்களை மாற்றியிருந்தாலோ, அந்த நேரத்தினை அடுத்து, புளு ஸ்கிரீன் ஏற்பட்டால், புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திடுங்கள். அல்லது ட்ரைவர் புரோகிராமினை மாற்றுங்கள். ட்ரைவர் புரோகிராம் எதனையும் மாற்றாத நேரத்தில், கம்ப்யூட்டரில் புளு ஸ்கிரீன் தோன்றுகிறது என்றால், நிச்சயமாக உங்கள் சிஸ்டத்தின் ஹார்ட்வேர் சாதனம் ஒன்றில்தான் பிரச்னை என்று உறுதியாகச் சொல்லலாம்.

    உங்கள் கம்ப்யூட்டர் பூட் ஆகவில்லை என்றால், இது ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் பிரச்னையாக இருக்கலாம். விண்டோஸ் இயங்கத் தொடங்கி, பாதியிலேயே தன்னை முடக்கிக் கொள்கிறதா? அல்லது கம்ப்யூட்டர் தன் ஹார்ட் ட்ரைவினை உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறதா? அல்லது உள்ளிருக்கும் சாதனங்களுக்கு மின் சக்தி செல்லாமல் இருக்கிறதா? இதற்கெல்லாம் காரணம் நிச்சயம் ஹார்ட்வேர் பிரச்னைகளாகத்தான் இருக்கும். பல்வேறு பிரிவுகளை இணைக்கும் கேபிள்களில் பிரச்னை இருக்கலாம். அல்லது அவை சரியான முறையில் இணைக்கப்படாமல் இருக்கலாம். கீழே, சில ஹார்ட்வேர் பிரிவுகள் தரக்கூடிய பிரச்னைகள் தரப்பட்டுள்ளன.

    ஹார்ட் ட்ரைவ்: உங்களுடைய ஹார்ட் ட்ரைவ் செயல்படத் தவறினால், அதில் உள்ள பைல்கள் கெட்டுப் போயிருக்கலாம். பைல் ஒன்றைப் பெற முயற்சிக்கையில் அல்லது ஹார்ட் ட்ரைவில் எழுத முயற்சிக்கையில், ஹார்ட் ட்ரைவ் அதிக நேரம் எடுக்கலாம். இதனால், விண்டோஸ் பூட் ஆகாமல் நின்றுவிடலாம்.

    சி.பி.யு. என அழைக்கப்படும் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் இயங்காமல் போனாலும், கம்ப்யூட்டர் இயக்கம் பூட் ஆகாது. சி.பி.யு. அளவிற்கு மேலாக வெப்பமாக ஆனாலும், புளு ஸ்கிரீன் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, கேம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தால், அல்லது வீடியோ ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தால், அதற்கு சி.பி.யு.வின் திறன் அதிகத் தேவை ஏற்பட்டு, சி.பி.யு. சூடாகி, தொடர்ந்து இயங்க முடியாமல், புளு ஸ்கிரீன் காட்டப்படும்.

    சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள், தங்களுக்கான டேட்டாவினை ராம் நினைவகத்தில் தற்காலிகப் பயன்பாட்டிற்கு எழுதி வைக்கின்றன. ராம் நினைவகத்தில் பிரச்னை ஏற்பட்டால், இந்த டேட்டாவில் சிறிதளவு மட்டுமே நினைவகத்தில் எழுதப்பட்டு, நமக்கு தவறான முடிவுகள் காட்டப்படும். இது இறுதியில், அப்ளிகேஷன் புரோகிராம் இயக்க முடக்கம், புளு ஸ்கிரீன் மற்றும் பைல் கெட்டுப்போதல் ஆகியவற்றில் முடியும்

    கிராபிக்ஸ் கார்டில் பிரச்னைகள் ஏற்பட்டால், அது டிஸ்பிளேயைத் தவறாகக் காட்டும். அல்லது குழப்பமான இமேஜ்களை உருவாக்கும். குறிப்பாக முப்பரிமாண கேம்ஸ் விளையாடுகையில் இது நடைபெறலாம்.

    கம்ப்யூட்டரில் சி.பி.யு. மற்றும் பொதுவான விசிறி என இரண்டு வகை விசிறிகள் இயங்கிக் கொண்டிருக்கும். கம்ப்யூட்டர் இயங்கும்போது ஏற்படும் வெப்பத்தினை வெளியேற்றவும், சி.பி.யு. வெப்பத்தினால் தாக்கப்படமால், பாதுகாப்பாக இயங்கவும் இந்த விசிற்கள் செயல்படுகின்றன. இந்த விசிறிகள் செயல்பாட்டில் தொய்வு அல்லது முடக்கம் ஏற்பட்டால், மேலே சொல்லப்பட்ட சி.பி.யு. மற்றும் கிராபிக்ஸ் கார்ட் பிரச்னைகள் ஏற்படலாம்.இதனால், கூடுதல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க, கம்ப்யூட்டர் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, தன் இயக்கத்தை நிறுத்தலாம்.

    மதர்போர்டில் ஏற்படும் பிரச்னைகளின் தன்மையினை அறிவது மிகவும் கடினமான செயலாகும். எப்போதாவதுதான் மதர் போர்டு மூலம் பிரச்னை ஏற்படும். ஏற்படுகையில், வேறு அறிகுறிகள் காட்டப்படாமல், புளு ஸ்கிரீன் காட்டப்படும்.

    மின் சக்தி பெறுவதிலும், அதனைப் பல்வேறு சாதனப் பிரிவுகளிடையே பங்கிட்டுக் கொள்வதிலும் பிரச்னை ஏற்பட்டால், இதனை அறிதலும் எளிதான செயல் அல்ல. சில வேளைகளில், குறிப்பிட்ட பகுதிக்குத் தேவைக்கு மேல், மின் சக்தி வழங்கப்படலாம். இதனால், அந்தச் சாதனப் பகுதி பழுதடையலாம். செயல்பாட்டில் தவறுகள் ஏற்படலாம். மின் சக்தி முழுமையாக ச் சென்றடையாவிட்டால், கம்ப்யூட்டர் இயங்காது. அதன் பவர் பட்டனை அழுத்தினால் ஒரு மாற்றமும் ஏற்படாது.

     -----------------------------------------------

    Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad