ஜில்லா பட பேனர்களை வைக்க பொலிசார் தடை விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தில் ......
ஜில்லா பட பேனர்களை வைக்க பொலிசார் தடைவிதித்ததால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.தலைவா படத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மூலம் தடை உத்தரவுகள் பலப்படுத்தப்பட்டதால், மீண்டும் அதே நிலை தனது படங்களுக்கு வரக்கூடாது என்று உஷாராக செயல்பட்டு வருகிறார் விஜய்.அதனால் ஜில்லா படத்தில் எந்தவொரு பஞ்ச் டயலாக்கும் இல்லாமல், கதைக்கு தேவையான வசனங்களை மட்டுமே பேசி நடித்துள்ளார்.அப்படி பேசி நடித்துள்ள டயலாக்கும் யாரையாவது மறைமுகமாக தாக்குவது போல் தெரிந்தால், அந்த வசனத்தையும் மாற்றி பேசி நடித்திருக்கிறார்.பொங்கலுக்கு படம் திரைக்கு வருவது உறுதியாகி விட்டதால், ஜில்லா படத்தின் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னை நகரத்திலுள்ள சில ஏரியாக்களில் ஜில்லா விஜய்யின் ராட்சத கட்அவுட் மற்றும் பேனர்களை வைக்க அவரது ரசிகர்கள் மன்றத்தினர் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த காவல்துறையினர் தடை விதித்து விட்டார்களாம்.அதனால் பேனர்களை எடுத்துக்கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்களாம் விஜய் ரசிகர்கள்.
கருத்துகள் இல்லை