ஏப்ரல் 11-ல் கோச்சடையான் வெளியீடு.... ரஜினி உஷார் நடவடிக்கை
எந்திரனுக்குப்பிறகு ரஜினி நடித்த கோச்சடையான் படம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ரிலீசாகிறது என்பதால் அவரது ரசிகர்கள் சந்தோச கூத்தாடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்த சந்தோசத்திலும் உஷார் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளார் ரஜினி. அதாவது, பாபா படம் தோல்வியடைந்தபோது, நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு வழங்கினார் ரஜினி.
அவர் கொடுக்க வேண்டிய கட்டாயமில்லை என்றாலும், தன்னால் அவர்கள் நஷ்டப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல் தாமாக முன்வந்து உதவினார். அதனால், அதையடுத்து ரஜினி படங்களை வாங்கி லாபம் சம்பாதித்தபோதும், சிலர் உங்கள் படம் கையை கடித்து விட்டது என்று ரஜினி வீடு தேடிச்சென்று தலையை சொறிந்து நஷ்டஈடு கேட்டு நின்றனர்.
அதனால், இனி அதுபோன்று தன்னைத்தேடி யாரும் வந்து நிற்கக்கூடாது என்பதற்காக, கோச்சடையான் படத்தில் ரஜினி நடிகர் மட்டுமே.
அதனால் லாப நஷ்டங்களுக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒரு அக்ரிமென்ட் போடப்பட்டு விட்டதாம். ரஜினியின் இந்த உஷார் நடவடிக்கையால், சில விநியோகஸ்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.
கருத்துகள் இல்லை