• Breaking News

    விமானத்தை வேண்டும் என்றே அந்தமான் தீவுகள் நோக்கி ஓட்டிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

    மாயமான மலேசிய விமானத்தை யாரோ வேண்டும் என்றே அந்தமான் தீவுகள் நோக்கி ஓட்டிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாயமான மலேசிய விமானம் விமானம் ஓட்டத் தெரிந்த யாரோ ஒருவரால் அந்தமான் தீவுகள் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


     
    ராணுவத்தின் ரேடாரில் மாயமான விமானம் அந்தமான் நோக்கி சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானம் ஓட்டத் தெரிந்த யாரோ ஒருவர் விமானத்தை வழக்கமான பாதையில் இருந்து திருப்பி வேறு பாதையில் ஓட்டி சென்றுள்ளார் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விமானம் கடந்த 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய சில மணிநேரத்தில் வழக்கமான பாதையில் இருந்து விலகிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. விமானம் ஏன் வேறு பாதையில் சென்றது என்று புரியாமல் இருந்த நிலையில் அதை விமானி அல்லாமல் வேறு ஒருவர் ஓட்டியிருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது என்று மலேசிய போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad