• Breaking News

    மலேசிய விமானம் எரிந்து கீழே வந்ததை நான் பார்த்தேன்: எண்ணெய் அகழ்வுப் பணி ஊழியர்

    மாயமான மலேசிய விமானம் தீப்பிடித்து தரை நோக்கி வந்ததை தான் பார்த்ததாக வியட்நாமின் கடல் பகுதி அருகே எண்ணெய் அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து சீனாவுக்கு கிளம்பிய விமானம் என்ன ஆனது என்று தெரியாமல் உள்ளது.

      
    இந்நிலையில் விமானம் சீனா சென்று மலேசியா திரும்பியதாக செய்திகள் வெளியாகின. விமானத்தை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என்றும், விமானம் விபத்துக்குள்ளாகி எங்காவது விழுந்திருக்கலாம் என்றும் பலவாரியாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

    இந்நிலையில் அந்த விமானம் பற்றி வியட்நாமின் தெற்கு கடற்பகுதி அருகே எண்ணெய் அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஒருவர் மலேசிய விமானம் வேகமாக கீழே விழ வந்ததை தான் பார்த்ததாக வியட்நாம் அதிகாரிகளுக்கு இமெயில் அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் இமெயிலில் கூறுகையில், விமானம் தீப்பிடித்து தரை நோக்கி வந்ததை நான் பார்த்தேன். விமானம் ஒன்று நாம் இருக்கும் பகுதி நோக்கி வந்திருக்க வேண்டும். இல்லை என்றால் வேறு எந்த பகுதிக்காவது சென்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த இமெயில் தங்களுக்கு கிடைத்ததாக வியட்நாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad