ஆகஸ்ட் 15ல் அஞ்சான் வெளியீடு லிங்குசாமி உறுதி
லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடித்து வரும் படம் அஞ்சான். இப்படத்தின் படப்பிடிப்பு அதாடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற ஆகஸ்டு 15ம் தேதி திரையில் ரிலீசாகும் என்று இப்படத்தின் இயக்குநர் லிங்குசாமி தெரிவித்தள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் “ஒரு பாடல் காட்சி தவிர அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டன. இப்பாடல் காட்சியை கோவாவில் படமாக்க உள்ளோம். இப்பாடல் இவ்வருடத்தின் மிகப்பெரிய காதல் பாடலாக இருக்கும். இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார். அடுத்த மாதம் இசை வெளியீட்டுடன் சேர்ந்து இப்படத்தின் டிரைலரும் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை