நடிகை பூஜா ரகசிய திருமணம்?
நடிகை பூஜா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜே.ஜே. படம் மூலம் பூஜா தமிழில் நாயகியாக அறிமுகமானார். அட்டகாசம், உள்ளம் கேட்குமே, ஜித்தன், தம்பி, ஓரம்போ உள்பட பல படங்களில் நடித்தார்.
பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் பார்வையற்றவர் கேரக்டரில் நடித்து பேசப்பட்டார். கடைசியாக விடியும் முன் என்ற படத்தில் நடித்தார். உள்ளம் கேட்குமே படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த ஆர்யாவை காதலித்ததாக கிசுகிசுக்கள் பரவின. நான் கடவுள் படத்திலும் இருவரும் இணைந்தே நடித்தார்கள்.
தங்களுக்குள் காதல் இல்லை என்று மறுத்தனர். வயதாவதால் பூஜாவுக்கு திருமணத்தை முடிக்க குடும்பத்தினர் ஆர்வம் காட்டினர். மாப்பிள்ளை தேடும் படலமும் நடந்தது. இந்த நிலையில்தான் பூஜாவுக்கு ரகசிய திருமணம் நடந்துள்ளதாக செய்தி பரவி உள்ளது. இதனை பூஜா தரப்பில் இன்னும் உறுதி படுத்தவில்லை
கருத்துகள் இல்லை