பரணி
ஜெஆர்பி இண்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் சார்பில் சகோதரர்கள் லீலாகுமார்- ராஜ பிரபு தயாரிக்கும் படம் பரணி. இப்படத்தில் புதுமுகங்கள் ராஜபிரபு, உமாஸ்ரீ, கதிர்விஜய் மற்றும் லீலாகுமார் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை அறிமுக இயக்குனர் மாவணன் இயக்கியுள்ளார். ஆர்.அரவிந்தா இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இப்படத்தை பற்றி இணை இயக்குனர் கூறும்போது,
வாழ்க்கை என்பது உறவுகளால் பின்னப்பட்டது. உறவுகளால் கதாநாயகன் பரணிக்கு ஏற்படும் தீமைகள். அதனை தொடர்ந்து அவன் உச்சகட்ட காட்சியில் எடுக்கும் முடிவை விறுவிறுப்புடன் அமைத்திருக்கிறோம் என்றார்.
மேலும் இப்படத்தில், இந்த ஆண்டின் தேசிய விருது பெற்ற, யுவராஜ் அவர்களின் டிடிஎஸ் இசை நுட்ப பணியில் உருவாகி வருகிறது. இப்படம் இம்மாதம் வெளியாகிறது.
கருத்துகள் இல்லை