கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க மகள்களை கட்டாயப்படுத்திய பெண் கைது
சத்தீஸ்கர் மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் மகள்களை உறவு கொள்ள கட்டாயப்படுத்திய பெண் கைது செய்யப்பட்டார்.
சத்தீஸ்கரில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜாஸ்பூர் மாவட்டம் கன்சாபெல் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் லீலாவதி(36). இவரது கணவர் 2009ம் ஆண்டு இறந்துவிட்டார். இவர்களுக்கு 18 மற்றும் 16 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். கணவர் இறந்தபின்னர் ஜுமான் கான் (24) என்ற வாலிபருடன் லீலாவதிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்தனர்.
இந்நிலையில், தன் மகள்கள் இருவரையும் சுமான் கானுடன் உல்லாசமாக இருக்கும்படி லீலாவதி கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் இதற்கு மகள்கள் உடன்படவில்லை. இதனால் அவர்களை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இவர்களின் கொடுமை தாங்காமல் கடந்த மே மாதம் 26ம் தேதி வீட்டில் இருந்து தப்பிய மகள்கள் இருவரும் தாத்தா வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர்.
பின்னர் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லீலாவதி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஜுமான் கான் ஆகியோரைக் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை