ஆனந்தி சினிமா நடிகையானார்
சீரியல்களில் நடித்து வந்த ஆனந்தி, விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் சீசன் 7 நடன நிகழ்ச்சியில் தனது சூப்பரான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார்.
அதுவும் சோலோ ரவுண்டில் அவர் ஆடிய பெல்லி டான்ஸ் யூ டியூப்பில் லைக்குகளை அள்ளுகிறது. ஆட்டம் தந்த புகழால் இப்போது சினிமா நடிகையாகிவிட்டார்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா, ஹன்சிகா நடிக்கும் மீகாமன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் இன்னும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதுபற்றி ஆனந்தி கூறியதாவது: சின்ன வயசிலிருந்தே நடனம்தான் எனக்கு உயிர். ஆனாலும் முதலில் சின்னத்திரையில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 7ல் ஆட ஆரம்பித்தபிறகு என் வாழ்க்கையே திசை மாறிவிட்டது.
எனது ஆட்டத்தை பார்த்துவிட்டு வெளிநாடுகளில் இருந்தெல்லாம் எப்படியோ என் போன் நம்பரை பிடித்து பாராட்டி பேசினார்கள். இயக்குனர் மகிழ்திருமேனியும் எனது நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நடிக்க அழைத்தார்.
மீகாமன் படத்தில் ஹன்சிகாவுக்கு அடுத்து முக்கியமான கேரக்டர். இப்போது நிறைய வாய்ப்புகள் வருகிறது. அதனால் இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன். சீசன் 7ல் மட்டும் ஆடுவேன். மற்றபடி இனி சினிமாவுக்குத்தான் முக்கியத்துவம். என்கிறார் ஆனந்தி.
கருத்துகள் இல்லை