மீண்டும் ரஜினி கமல் ஜோடி சேர்கின்றனர் ?
தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களாக இருக்கும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படம் நினைத்தாலே இனிக்கும். இந்த திரைப்படம் கடந்த 1979ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்தது. இந்த படத்திற்கு பின்னர் இருவரும் சேர்ந்து பேசி, தனித்தனியாக படம் நடிப்பது என்றும், இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்றும் முடிவு செய்தனர்.
தற்போது 35 வருடங்கள் கழித்து மீண்டும் அதே கே.பாலசந்தரின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கே.பாலசந்தர் இந்த படத்திற்கான திரைக்கதையையும் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்
.
ரஜினியின் லிங்கா, மற்றும் கமல்ஹாசனின் உத்தம வில்லன் ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு முடிந்தபின்னர் இந்த படத்தை வரும் 2015ல் தொடங்க கே.பாலசந்தர் முடிவு செய்துள்ளார். அவரது கவிதாலயா நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை