ஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது
மும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவர் செல்போனில் தொடர்புகொண்டு வேலை வாங்கித்தருவதாக கூறி, பயந்தர் ரெயில் நிலையத்திற்கு அழைத்தார். அதன்பேரில் அந்த பெண் ரெயில்நிலையம் சென்றார்.
அப்போது அங்கு வந்த 2 பேர் அவரை அலுவலகத்திற்கு அழைத்து செல்வதாக கூறி, காரில் ஏற்றிக்கொண்டனர். கார் சிறிது தூரம் சென்றதும் ஒருவர் காரை ஓட்ட மற்றொருவர் துப்பாக்கி முனையில் மிரட்டி அந்த பெண்ணை கற்பழித்தார். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் விதவை பெண்ணை காரில் இருந்து தள்ளிவிட்டு அவர்கள் தப்பினர்.
இதுபற்றிய புகாரின் பேரில் நாவ்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். பெண்ணுக்கு வேலை தருவதாக ஏமாற்றி காரில் அழைத்து சென்று கற்பழித்த பயந்தர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் பங்கஜ் போத்ரா(வயது42) என்பரை கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை