• Breaking News

    லட்சுமிராய் தனது பெயரை மாற்றினார்

    நடிகைகள் பலர் தங்கள் பெயரை மாற்றி வைத்து நடித்து வருகிறார்கள். பெற்றோர்கள் பெயரை மாற்றி சினிமாவுக்காக புதுப்பெயர் வைத்துள்ளார்கள். இன்னும் சிலர் நியூமராலஜிபடி பெயர்களில் எழுத்துக்களை சேர்த்தும், சுருக்கியும் வைத்து இருக்கிறார்கள். அதன் பிறகு அவர்களுக்கு படவாய்ப்புகளும் குவிகிறது. 



    இதனால் சினிமா உலகினரை எண்கணித ஜோதிடம் ஆட்டி படைத்து வருகிறது. தற்போது லட்சுமி ராயும் தனது பெயரை ‘ராய் லட்சுமி’ என மாற்றி வைத்துள்ளார். லட்சுமிராய் அரண்மனை, இரும்புக்குதிரை படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். கன்னட, மலையாள படங்களும் கைவசம் உள்ளன. 

    பெயர் மாற்றம் குறித்து லட்சுமிராய் கூறியதாவது, 

    பெற்றோர் எனக்கு லட்சுமி என பெயர் வைத்தனர். அந்த பெயரை வைத்து யாரும் என்னை அழைப்பது இல்லை. சிலர் ‘ராய்’ என்று கூப்பிட்டனர். இன்னும் சிலர் லட்சிராய் என்றார்கள். வீட்டில் கூட என்னை ராய் என்றே அழைத்தார்கள். பிறகு சினிமாவிலும் லட்சுமிராய் என்றே அழைக்கப்பட்டேன். இந்த பெயரை மாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக யோசித்து வந்தேன். இப்போது நடந்துள்ளது. புதிய பெயரை வைத்துக் கொள்ளவில்லை. ஏற்கனவே இருந்த லட்சுமி ராய் என்ற பெயரைதான் ராய் லட்சுமி என்று ஆக்கி உள்ளேன். ராய் என்பதில் கூடுதலாக ஒரு ஆங்கில ‘ஏ’ எழுத்தை சேர்த்து இருக்கிறேன். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad