• Breaking News

    சூரிய மின்தகடு ஊழலில் சிக்கிய சரிதா, காங். எம்.எல்.ஏ.மீது செக்ஸ் குற்றச்சாட்டு

    கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூரிய மின் தகடு ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் சரிதா நாயர். கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளார்.இவர் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி, தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசியதாகவும், தனது தொகுதியில் சூரிய மின்தகடு பதிப்பது தொடர்பாக திருவனந்தபுரத்தில் ஒரு ஓட்டலில் பேச வந்தபோது பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.


    இந்த நிலையில் சரிதா நாயர், திருவனந்தபுரத்தில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று ஆஜராகி, மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தார். பின்னர் நிருபர்களிடம் பேசியபோது, கோர்ட்டில் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல்களை வெளியிட முடியாது என மறுத்து விட்டார்.

    இருப்பினும், அப்துல்லா குட்டி மீதான பாலியல் புகார் குறித்த தகவல்களை அவர் வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad