அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,569 பேர் பலிகொண்ட கொரோனா..!
அமெரிக்காவில் 644,89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அந்நாட்டில் 28,529 பேர் பலியாகி உள்ளனர். 48,701 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 214,648 பேருக்கும், இதனை தொடர்ந்து நியூஜெர்சி நகரில் 71,030 பேருக்கும் அதிக அளவாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதேபோன்று இந்த இரு நகரங்களிலும் கொரோனா வைரசுக்கான பலி எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளன. நியூயார்க்கில் 11,586 பேரும், நியூஜெர்சியில் 3,156 பேரும் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 2,569 பேர் பலியாகி உள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கின்றது. இது வேறெந்தவொரு நாட்டையும் விட மிக அதிக அளவிலான பலி எண்ணிக்கையை கொண்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை