• Breaking News

    தினசரிச் செயற்பாட்டை இயல்பு நிலைக்கு திருப்ப வேண்டும - சனாதிபதி



    இன்னும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீண்டும் ஆரம்பித்து நாளாந்த நடவடிக்கைகளை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டுமென, சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். தேசிய பொருளாதாரத்தையும் மக்கள் வாழ்க்கையையும் பாதுகாக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

    அரசாங்கத்தின் அடுத்த கட்ட பணிகள் சம்பந்தமாக அமைச்சுக்களின் செயலாளர்களுடன,; நேற்று(15) சனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின்போதே, சனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடமைகளை தடையின்றி மேற்கொள்ளக்கூடிய வகையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

    மக்கள் ஒன்றுகூடுவதற்கு இடமளிக்காது, உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாய, மீன்பிடி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட கைத்தொழில் நிறுவனங்களை மீண்டும் செயற்படுத்துவதற்கு தேவையான பின்புலத்தை அமைப்பதற்குத் தேவையான உதவியை அமைச்சுக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சனாதிபதி  அமைச்சுக்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

    புதிய பொருளாதார முறைமையொன்றை கட்டியெழுப்பும் பொறிமுறையை அமைக்கும் பொறுப்பை அமைச்சுக்களுக்கு வழங்குவதாகவும் சனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
    அத்துடன், ஏற்றுமதி விவசாய பயிர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி பயிர்ச்செய்ய முடியுமான நிலங்களை வினைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்திக்கொள்ள தேவையான பின்புலத்தை ஏற்படுத்துமாறும் சனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad