• Breaking News

    வில்லியாக பூமிகா



    தமிழில் விஜயுடன் பத்ரி, சூர்யா ஜோடியாக சில்லுனு ஒரு காதல், ஸ்ரீகாந்துடன் ரோஜா கூட்டம் ஆகிய படங்களில் நடித்தவர் பூமிகா. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். 2007-ல் யோகா ஆசிரியர் பரத் தாகூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    திருமணத்துக்கு பிறகு கொஞ்சகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த பூமிகா, பின்னர் மீண்டும் நடிக்க தொடங்கினார். தமிழில் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ரவிதேஜாவின் ‘சீட்டிமார்’ என்ற படத்திலும் நடிக்கிறார்.

    இந்த நிலையில் பூமிகா தற்போது வில்லி வேடத்துக்கு மாறி இருக்கிறார். பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் தெலுங்கு படத்தில் பூமிகா வில்லி வேடம் ஏற்றுள்ளார். இதில் கதாநாயகியாக நடிக்க சோனாக்சி சின்ஹா, கேத்தரின் தெரசா ஆகியோர் பரிசீலிக்கப்பட்டு, தற்போது ஸ்ரேயாவை தேர்வு செய்துள்ளனர். முன்னாள் கதாநாயகிகள் சிலர் வில்லியாக நடிப்பதால் பூமிகாவுக்கும் அந்த கதாபாத்திரத்தின் மீது ஆசை வந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து தமிழ் படங்களிலும் வில்லியாக நடிக்க பூமிகாவுக்கு வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad