• Breaking News

    நாயகன் பட பாடலை ஸ்டைலாக பாடி அசத்தும் சுருதி




    மணிரத்தனம் இயக்கத்தில் 80 களில் வெளிவந்த தமிழ் திரைப்படம் நாயகன். இந்தத்திரைப்படம் இந்திய அளவில் பேசப்பட்ட திரைப்படமாகும்.  இத்திரைப்படம் டைம் வார இதழின் உலகின் நூறு சிறந்த திரைப்படங்களிள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது 1988 ஆம் ஆண்டு கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இது மும்பையில் தாதாகவாக விளங்கிய வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.


    கொரோனாவால் வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில் தான் பலருக்கும் பழைய விஷயங்களை நினைத்து பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான சுருதிகாசன், இசைத்துறையிலும் பிரபலமானவர். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தில் வரும் தென்பாண்டி சீமையிலே பாடலை கீபோர்டில் வாசித்துக்கொண்டே பாடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த காலத்திற்கு ஏற்றப்படி டியூனைப்போட்டி பாடியிருக்கும் சுருதியின் குரல் கேட்பவர்களை சுண்டி இழுக்கிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad