கேரளாவில் முதன்முதலில் நடத்தப்பட்ட நிர்வாண போட்டோஷூட்
தாய்மை பருவம் சந்தோஷமாக கொண்டாடப்பட வேண்டிய காலம். மகிழ்ச்சி ததும்பும் தருணங்களால் அன்பைப் பரப்பும் காலம் அது.
அப்படிப்பட்ட தாய்மைத் தருணங்களை செட்டிங், மனநிலை, லைட்டிங் என பலவற்றையும் துல்லியமாக பயன்படுத்தி படம் பிடிக்க வேண்டும்.
பெற்றோர்களாக மாறப்போகும் அம்ருத் பாபா மற்றும் ஜான் என்ற தம்பதி கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில், ஒரு அழகிய நதியில் தங்களின் மகப்பேறு காலத்தை நிர்வாணமாக போட்டோஷூட் செய்துள்ளனர். இந்த போட்டோஷூட் நடத்தியவர் கேரளாவைச் சேர்ந்த அதிரா ஜாய் என்ற 28 வயது பெண் புகைப்படக் கலைஞர்.
நிர்வாண போட்டோஷூட் என்பது ஒவ்வொரு புகைப்படக் கலைஞரின் கனவு என்று அதிரா தி வீக் கூறுகிறார். இந்த பிரெஞ்சு தம்பதிகளை படம் எடுக்க வாய்ப்பு கிடைத்த போது, தான் எடுக்கப்போகும் புகைப்படங்களில் தனது தனித்துவமான முத்திரையை பதிக்க விரும்பினார்.
இதற்கு முன்னரே கேரளாவில் பல நிர்வாண மகப்பேறு போட்டோஷூட்கள் இருந்தபோதிலும், அவை அனைத்தும் உட்புறத்தில் எடுக்கப்டட்டன என்று அதிரா கூறுகிறார். அம்ருத் பாபாவும் ஜானும் அதிராவின் கணவருடைய நண்பர்கள். அதிரா தனது நிர்வாண போட்டோஷூட்க்கு சில மாதிரிகள் எடுத்து இந்த பிரஞ்சு தம்பதிகளிடம் காண்பித்த போது அவர்களும் இதற்கு ஒத்துக்கொண்டனர்.
உடனே திட்டம் அமைக்கப்பட்டது, மாதிரிகள் தயாராக இருந்தன, ஆனால் இதற்கான இடத்தைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. ரிசார்ட்ஸ் அல்லது ஹோட்டல்களை தேர்வு செய்தாலும் அங்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி பிரச்னைகள் இருக்கும். எனவே தனது கனவு போட்டோஷூட் நடைபெறாது என்று அதிரா கவலைப்பட்டார். பின்னர், கோழிக்கோட்டில் உள்ள கோடெஞ்சரியில் உள்ள ஒரு ஆற்றில் போட்டோஷூட் நடத்தும் ஐடியா உருவானது. தேவையான அனுமதி பெறப்பட்டது, திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடிந்தது. என்னுடைய போட்டோஷூட் அம்ருத் மற்றும் ஜான் இருவருக்கும் பிடித்திருந்தது.
அந்த புகைப்படங்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பிறகு, ஒரு சிலர் படப்பிடிப்பு மிகவும் அபத்தமாக இருப்பதாகக் கருதினர். சிலர் ரிப்போர்ட் செய்ததால் பேஸ்புக் இந்த புகைப்படங்களை தடை செய்தது. புகைப்படங்களை தடை செய்வதற்கான நடவடிக்கையின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை என்று அதிரா கூறினார்.
கேரளாவில் நடந்த இந்த நிர்வாண போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது
கருத்துகள் இல்லை