WHO இற்கு நிதியளிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ள டிரம்ப்
உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதியளிப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். தொடர்ச்சியாக சீனா மீதும், உலக சுகாதார அமைப்பு மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிபர் ட்ரம்ப்,
அமெரிக்க அளிக்கும் நிதியை உலக சுகாதார நிறுவனத்தால் சிறந்த பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதா என்பது குறித்து எனக்கும் தமது அரசாங்கத்திற்கும் ஆழ்ந்த கவலைகள் ஏற்பட்டிருக்கிறது.
சுகாதார அமைப்பு அதன் அடிப்படை கடமையில் தோல்வியுற்றுள்ளது. அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். கொரோனா பரவல் தொடர்பில் சீனா அளித்த தவறான தகவல்களை அந்த அமைப்பு முன்னிலைப்படுத்தியே வந்திருக்கிறது. இல்லை எனில் உலக நாடுகள் கண்டிப்பாக கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருக்கும்.
சுகாதார அச்சுறுத்தல்கள் குறித்த துல்லியமான தகவல்கள் சரியான நேரத்தில் பகிரப்படுவதை உறுதிசெய்ய நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உலக சுகாதார அமைப்பையே உலகம் சார்ந்துள்ளது. அதன் வெளிப்படையான தோல்விகளுக்கு அமைப்பு பொறுப்பேற்க வேண்டும். எவ்வாறாயினும், அர்த்தமுள்ள சீர்திருத்தங்கள் தொடர அமெரிக்கா அந்த அமைப்புடன் தொடர்ந்து ஈடுபடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை