ஐபிஎல் நடக்காததால் 11 ஆயிரம்கோடி ரூபா நஷ்டம்
2020 ஐபிஎல் தொடர்
இந்த ஆண்டு நடக்கவில்லை என்றால் பிசிசிஐ அமைப்புக்கு சுமார் 4,000 கோடி ரூபா வரை நஷ்டம்
ஏற்படும் என அதன் பொருளாளர் அருண் துமால் கூறி உள்ளார். பிசிசிஐயில்
இருந்து வரும் தகவல்களை வைத்துப் பார்த்தால் 2020 ஐபிஎல் தொடரை நடத்த முடியாது என்ற
நிலைக்கு பிசிசிஐ வந்து விட்டதாகவே தெரிகிறது. கொரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் கிறிக்கெற்
எல்லாம் அவசியம் இல்லை என்ற முடிவில் மக்கள் இருந்தாலும், ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால்
இந்திய பொருளாதாரத்துக்கு சுமார் 11,000 கோடி ரூபா நஷ்டம் ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ்
காரணமாக மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய 2020 ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டது.
அதன் பின்னரும் நிலைமை மோசமாக சென்றதால் ஐபிஎல் தொடரை அடுத்த அறிவிப்பு வரும் வரை கால
வரையின்றி தள்ளி வைத்துள்ளது பிசிசிஐ.
ஐபிஎல் தொடரை
நடத்துவதில் பிசிசிஐ அமைப்புக்கு உள்ள முதல் சிக்கல் லாக்டவுன் தான். ஒரே மைதானத்தில்,
ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தினாலும், லாக்டவுன் விதிகள் அமலில் இருப்பதால் விதிப்படி
போட்டியை நடத்த முடியாது. கொரோனா பரவும் அபாயம் ஒருவேளை சிறப்பு அனுமதி வாங்கி, முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளுடன் ஐபிஎல் போட்டிகளை நடத்தினாலும் கிறிக்கெற் வீரர்கள், தொலைக்காட்சி ஒளிபரப்பு சார்ந்த ஊழியர்களுக்கு கொரோனா
வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் அபாயகரமானது.
இந்திய அரசு
விசா வழங்க மறுத்து வரும் நிலையில், வெளிநாட்டு வீரர்களை இந்தியா வரவழைப்பது மிக மிக
கடினமான காரியம். விமான சேவைகள் வெகுவாக முடங்கி இருக்கும் இந்த சமயத்தில் அவர்களை
இந்தியா அழைத்து வருவதோடு, அவர்களை 14 நாட்கள் தனிமையில் வைத்திருக்க வேண்டும். அதுவும்
சிக்கல் தான். வாய்ப்பே இல்லை இந்த சூழ்நிலையில், 2020 ஐபிஎல் தொடரை அடுத்த சில மாதங்களுக்கு
நடத்த வாய்ப்பே இல்லை.
வருட இறுதியில் கொரோனா
வைரஸ் பாதிப்பு குறைந்தாலும், அப்போது அனைத்து நாடுகளும் கிறிக்கெற் தொடர்களை நடத்தி
நஷ்டத்தை ஈடு கட்ட முயற்சி செய்யும். எனவே, அப்போது ஐபிஎல் தொடரை நடத்த வாய்ப்பே இல்லை.
ஐபிஎல் தொடரை ரத்து
செய்தால் அதனால் பிசிசிஐக்கு 4,000 கோடி நஷ்டம் ஏற்படும் என பிசிசிஐ பொருளாளர் அருண்
துமால் சமீபத்தில் கூறி இருந்தார். அது மட்டுமின்றி, பிசிசிஐ 2020 ஐபிஎல் தொடரை காப்பீடு
செய்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதனால், இந்த நஷ்டத்தை ஈடு கட்ட முடியாமலும்
போகக் கூடும்.
கருத்துகள் இல்லை