• Breaking News

    11,600 ஆண்டுகளுக்கொரு முறை தெரியும் பச்சை வால் நட்சத்திரம்



    ஸ்வான்
    என்று அழைக்கப்படும்   பச்சை நிற வால் நட்சத்திரம் தற்போது பூமிக்கு அருகில் கடந்து செல்கிறது. இதன் வால் மட்டும் ஒரு கோடியே 77 லட்சம் கி.மீ. நீளம் கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பனி மற்றும் தூசுக்களால் ஆன வால் நட்சத்திரம் தெற்கிலிருந்து வடக்காகச் செல்வதாகவும் தற்போது பூமியிலிருந்து 5.3 கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் இந்த நட்சத்திரம் மே மாத இறுதி வாரத்தில் கண்களுக்கு தெரியும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    சூரியனை நோக்கிய வழியில் செல்லும் போது வெப்பமடைந்து அது சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது என்று கூறும் ஆய்வாளர்கள் இதை 5 முதல் 6 நாட்கள் வரை வெறும் கண்களாலேயே கணடு மகிழலாம் என்று தெரிவித்துள்ளனர். 11,600 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் நிகழக்கூடிய அதிசய நிகழ்வான பச்சை வால் நட்சத்திரத்தை வெறும் கண்களால் கண்டு களிக்கலாம் என்று என்று நாஸா அறிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad