11 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எலும்புகூடு கண்டுபிடிப்பு
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 11 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிதான பல் இல்லாத டைனோசரின் எலும்புகூடு கண்டறியப்பட்டுள்ளது. மெல்போர்ன் அருங்காட்சியகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் படிமத் தேடல் நிகழ்வில் கலந்துகொண்ட ஜெசிகா பார்கரால் என்ற தன்னார்வலர் இதனை கண்டுபிடித்துள்ளார்.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “எல்பிரோசார் எனப்படும் அந்த டைனோசரின் பெயருக்கு லேசான பாதம் கொண்ட பல்லி என்று பொருள். அந்த படிமத்தை ஆராய்ந்தபோது அதற்கு நீண்ட கழுத்துகளும், குட்டையான கைகளும், லேசான உடல்வாகும் இருந்தது தெரியவந்தது” என கூறினர்.
இந்த டைனோசர் இரண்டு மீற்றர் உயரத்தில் இருந்திருக்கலாம்
என்றும் தெரியவந்துள்ளது.
இருப்பினும் இதற்கு முன்னர் தான்சானியாவிலும் சீனாவிலும் கிடைத்த படிமங்கள் ஆறு மீற்றர் நீளம் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வகையான எல்பிரோசர் டைனோசர்கள் வளர்ந்த பிறகு அதிகளவிலான இறைச்சியை உட்கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இளம் வயது டைனோசர் மண்டை ஓடுகளில் இருந்த பற்கள் வளர்ந்த விலங்குகளின் மண்டை ஓடுகளில் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல் ஆஜென்ரீனாவின் தெற்கு பகுதியில் உள்ள சாண்டாகுரூஸ் மாகாணத்தில் 7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புகூடை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மெகராப்டர் என்றும் அழைக்கப்படும் இந்த வகை டைனோசர்கள் பூமியில் வாழ்ந்த டைனோசர்களின் கடைசி இனமாக இருந்திருக்கலாம்
என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
10 மீமீற்றர் உயரம் கொண்ட இந்த வகை டைனோசர் மெலிதான உடலமைப்பு மற்றும் நீண்ட வால்களை உடையதாக இருந்திருக்கும்
என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை