மெக்ஸிக்கோவில் 15,000 ஆண்டுகலுக்கு முந்தைய எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
இந்த எலும்புகள் 15,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று மெக்ஸிக்கோவின் தேசிய மானிடவியல் மற்றும் வரலாற்றுக் கழகம் தெரிவித்தது..
எதிர்கால விமானநிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரம் வரவிருக்கும் பகுதியில்தான் இந்த எச்ச சொச்ச எலும்புகள் கிடைத்துள்ளன. பனியுக காலத்தின் விலங்குகளின் எலும்புக்கூடுகளை கண்டுபிடிப்பதில் இந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த டிசம்பரில் இதே தொல்லியல் குழுவினர் சிறு சிறு விலங்குகளின் எலும்புகளைக் கண்டெடுத்ததகத் தெரிவித்தனர்.
நாட்டின் கொலம்பஸுக்கு முந்தைய நாகரீகத்தையும் தாவர வகைகளையும் கண்டுப்பிடிப்பதில் ஆய்வாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். இப்போது தோண்டிய பகுதி முன்பு சல்டோகன் ஏரியின் கீழ் அமிழ்ந்த பகுதியாகும். இந்த ஏரி வற்றியவுடன் இந்தப் பகுதியை
தொல்லியல் ஆய்வு செய்ய முடிவெடுத்தனர்.
கொலம்பியாவின்
மிகப்பெரிய விலங்கினங்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கபட்டுள்ளன. காட்டெருமை, ஒட்டகங்கள், குதிரைகள் ஆகியவற்றின் எலும்புக்கூடுகளுடன் மனித எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன ஸ்பானிய காலனியாதிக்கத்துக்கு முந்தைய நாகரிகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்தப் பணி அங்கு விமானநிலையக் கட்டுமானத்தை தடுத்து நிறுத்துவதற்காகத்தான் என்ற கருத்தும் பொதுமக்களிடையே நிலவுகிறது ஆனால் இதனை தொல்லியல் குழு மறுத்துள்ளது.
எந்த ஒரு பண்பாட்டைச் சேர்ந்த மக்களுக்கும் தங்கள் மூலங்களைத் தேடுவதற்குரிய ஆர்வம் இருக்கவே செய்யும். அதுவும் மொழியையே இழந்து ஸ்பானிய மொழியைப் பேசும் தென் அமெரிக்க நாடுகளில் சுயத்தை குறித்த தேடல் அதிகமாகவே இருக்கும்.
கருத்துகள் இல்லை