25 வருடங்களின் பின் இணைந்த நடிகர்கள்.
பிரியதர்ஷன் டைரக்ஷனில், கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம், `காலாபாணி.’ மோகன்லால் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருந்தார். பிரபு நடித்த முதல் மலையாள படம், அது. இந்த படத்தை தமிழில், `சிறைச்சாலை’ என்ற பெயரில் எஸ்.தாணு வெளியிட்டார்.
25 ஆண்டுகளுக்குபின், மோகன்லாலும், பிரபுவும் `மரைக்காயர் அரபிக்கட லிண்டே சிம்ஹம்’ என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்து இருக் கிறார்கள். இந்த படத்தையும் பிரியதர்ஷனே இயக்கி இருக்கிறார். தமிழில், `மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற பெயரில் எஸ்.தாணு வெளியிடுகிறார்.
இந்த படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சுவாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ், நெடுமுடி வேணு, அசோக் செல்வன், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறார்கள். ஆண்டனி பெரும்பவூர் தயாரித்து இருக்கிறார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
கருத்துகள் இல்லை