உண்மையான 747 ரக விமானத்தை விலைக்கு வாங்கி வெடிக்க வைத்த இயக்குனர் நோலன்
திரைப்படத்தில்
வரும் ஒரு காட்சிக்காக பலகோடி விலையுள்ள உண்மையான புது விமானம் ஒன்றை விலைக்கு வாங்கி அதை வெடிக்க செய்துள்ளார் பிரபல ஹொலிவூட்
இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்.
பிரமாண்டத்திற்கு பெயர் போன ஹொலிவூட்
ட் இயக்குனர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இன்செப்சன், இன்டெர்ஸ்டெல்லர் போன்ற பிரமாண்ட வெற்றிப்படங்களை கொடுத்த இவர் அடுத்ததாக டெனட் என்ற ஹொலிவூட் படத்தை இயக்கிவருகிறார்.
இந்த படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள கிறிஸ்டோபர் நோலன், படத்தில் விமானத்தை வெடிக்கவைப்பது போன்ற ஒரு காட்சி வருவதாகவும், முதலில் அந்த காட்சியை செற் அமைத்து அல்லது கிராபிக்ஸ் மூலம் படமாக்க முயற்சித்ததாவும் கூறியுள்ளார்.
ஆனால், இந்த முயற்சியில் அளவுக்கு அதிகமான பணம் செல்வாக்கும் என்று தோன்றியதால் உண்மையான விமானத்தை வாங்கி வெடிக்கவைக்கலாம் என திட்டமிட்டதாகவும், உண்மையான விமானத்தின் விலை செற் அல்லது கிராபிக்சில் ஆகும் செலவை விட குறைவாகவே வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், நினைத்ததுபோலவே உண்மையான 747 ரக விமானத்தை விலைக்கு வாங்கி வெடிக்க வைத்ததாகவும், காட்சிகள் மிகவும் அருமையாக படமாக்கப்பட்டிருப்பதாகவும் கிறிஸ்டோபர் நோலன் கூறியுள்ளார். படத்திற்காக உண்மையான விமானத்தை விலைக்கு வாங்கி வெடிக்கவைத்து
படப்பிடிப்பு நடத்தியதால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை